குருடனான பர்திமேயு BLIND BARTIMAEUS 55-04-00 வில்லியம் மரியன் பிரான்ஹாம் குருடனான பர்திமேயு இந்தச் செய்தியானது சகோதரன். வில்லியம் மரியன் பிரான்ஹாம் அவர்களால் 1955ம் வருடம், ஏப்ரல் மாதம், ஆல்பர்ட்டா, கனடாவில் அளிக்கப்பட்டது. ஒலிநாடா ஒலிப்பதிவிலிருந்து அச்சிடப்பட்ட ஆங்கில புத்தகத்திலிருந்து ஏட்டிதழின் பக்கத்திற்கு சொல்வடிவமான செய்தியாக மாற்ற ஒவ்வொரு முயற்சியும் துல்லியமாக செய்யப்பட்டு, இப்புத்தகம் முழுமையாக அச்சிடப்பட்டு, இலவசமாக விநியோகிக்கப் படுகின்றது. தமிழ், ஆங்கிலம், மலையாளம், தெலுங்கு, கன்னடம் மொழிகளில் சகோ பிரான்ஹாம் PDF செய்திகளை கீழ்கண்ட வெப்சைட்டில் டவுன்லோட் செய்து கொள்ளலாம் Bro.Branham Message PDF sermons can be download in the below website for the following language - Tamil, English, Malayalam, Telegu & Kannada language. www.bridemessage.com குருடனான பர்திமேயு BLIND BARTIMAEUS ஆல்பர்ட்டா, கனடா 55-04-00 ...?... அந்நாட்களில், பிச்சைக்காரர்கள், அவர்கள் பொது ஜனங்களிடமிருந்து ஏதாவது கொஞ்சம் பெற்றுக் கொள்ள வேண்டுமானால், வழக்கத்தைக் காட்டிலும் இன்னும் கூடுதலாக ஏதாவது செய்வார்கள். நாம் அதை இந்தியாவில் பார்க்கலாம். ஒரே வழியில் மாத்திரம் ஒரு பிச்சைக்காரன் எப்போதாவது எதையாகிலும் பெற்றுக் கொள்வான். அது எப்படியென்றால் அப்படியே தன் கையை நீட்டியபடி தெருவில் நின்று கொண்டு, 'எனக்கு ஒரு காசு கொடுங்கள்' என்று கேட்டோ, அல்லது ஏதோவொன்றை பிச்சைக் கேட்பான். 2. ஆனால் அவர்கள் ஒரு சிறு... ஒரு சிறு... காரியத்தை உடையவர்களாக இருந்தால்... ஒரு சிறிய மனிதன் ஒரு ஆச்சரியப்பட்டேன். அவன், இந்தச் சிறு குரங்கானது ஒரு குச்சியினால் அவனுக்கு ஒரு அடி கொடுக்கும்; அந்தக் குச்சியை எடுத்து, தெருவில் எல்லாவிடங்களிலும் அவனைத் துரத்திச் சென்று, அவனுக்கு அடி கொடுத்துக் கொண்டிருக்கும். பின்பு அவன் பிச்சையெடுப்பான்; யாராவது ஒருவர் அருகில் வருவதை அவன் காணும் போது, அந்தக் குரங்கு மறுபடியும் அவனைத் துரத்தும், அப்போது அவன் ஓடிச்சென்று அவர் முன்பாக முகங்குப்புற விழுந்து, தன்னுடைய கைகளை தரையில் பரப்பி வைத்தவாறு, தனக்கு ஏதாவது கொடுக்கும்படியாக, யாரிடமாவது பெற முயற்சித்துக் கொண்டிருப்பான். 3. வேறொருவர் ஒரு நாகப்பாம்பை வைத்திருந்தார்; மேலும், ஓ. வெவ்வேறான காரியங்கள்; அவர்கள் செய்யக்கூடிய எல்லாமே, அந்த வழியாக நடந்து போகிறவர்களை தங்கள் பக்கம் கவனத்தை ஈர்ப்பதற்காக ஏதோவொரு சிறிய கவரத்தக்க வித்தியாசமான ஏதோவொன்றை செய்வார்கள். 4. குருடனான பர்திமேயுவிடம் இரண்டு சிறிய மணிப்புறாக்கள் இருந்ததாக நமக்குக் கூறப்பட்டுள்ளது, இந்த புறாக்கள் ஜனங்களுக்காக ஒன்றின் மேல் ஒன்று குட்டிக்கரணம் அடிப்பது போல சின்ன சின்ன குறும்புத்தனமான செயல்களை செய்யுமாம். 5. ஒரு இரவில் அவனுடைய மனைவி வியாதிப்பட்டதாக அவர்கள் கூறினார்கள். இப்பொழுது, இது ஒருக்கால் ஒரு கற்பனை கதையாக இருக்கலாம். எனவே அவன் வெளியே போய், தேவன் தன்னுடைய மனைவியைச் சுகமடையப் பண்ணினால், அவன்-அந்த - அவன்-அந்த மணிப் புறாக்களை அடுத்த நாள் காலையில் மேலே ஜெப ஆலயத்திற்குக் கொண்டு சென்று, அவைகளை காணிக்கையாகச் செலுத்துவதாக தேவனிடம் வேண்டிக் கொண்டான். நல்லது, மனைவி சுகமடைந்து விட்டாள், எனவே அவன் சென்று அந்த மணிப்புறாக்களை காணிக்கையாகச் செலுத்தினான். அதன் பிறகு ஜனங்களின் கவனத்தைக் கவர்ந்து கொள்ள அவனிடம் ஒன்றும் இல்லை. 6. சற்று கழித்து, அவன் ஒரு போதுமே கண்டிராத அவனுடைய சிறிய மகள் ஒரு இரவில் வியாதிப்பட்டதாகக் கூறினார்கள், இதற்கு மேல் எதுவுமே செய்ய முடியாது என்று மருத்துவர்கள் சொல்லி விட்டார்கள். எனவே...எனவே அவன் அப்போது என்ன செய்தான் என்றால் அவன் வெளியே போய் ஜெபம் பண்ணினான். அவன், "கர்த்தாவே, உமக்குக் கொடுக்க என்னிடம் ஒரே காரியம் மாத்திரமே இருக்கிறது, அது என்னுடைய ஆட்டுக்குட்டி" என்றான். 7. இப்பொழுது, இன்றைக்கு வழக்கமாக ஒரு குருடான மனிதன் ஒரு நாயினால் வழி நடத்தப்படுகிறான். அவர்களிடம் நாய்கள் இருக்கின்றன, குருடர்களை வழி நடத்தும்படியாக, அவர்கள் அவைகளுக்குப் பயிற்சி கொடுக்கிறார்கள். அந்த நாட்களில், பயிற்சி பெற்ற ஒரு நாய்க்குப் பதிலாக, பயிற்சி பெற்ற ஒரு ஆட்டுக்குட்டி அவர்களிடம் இருந்தது; அந்த ஆட்டுக்குட்டி தான் அந்தக் குருடனை வழி நடத்தினது. மேலும் அவன், "எனக்கு இருப்பது எல்லாமே இந்த ஆட்டுக்குட்டி தான். ஆனால் பிதாவே நீர் என்னுடைய சிறிய மகளைச் சுகமடையப் செய்தால், பிதாவே நாளைக்கு நான் இந்த ஆட்டுக்குட்டியை உமக்குத் தருவேன் என்று உமக்கு வாக்குக் கொடுக்கிறேன்" என்றான். 8. எனவே அந்தச் சிறு மகள், அடுத்த நாள் காலையில் அவள் முன்பை விட மிகவும் நன்றாக இருந்ததால் சுகமடைவதற்கான முன்னேற்றத்தை அவன் கண்டான். எனவே அவன் அந்த ஆட்டுக்குட்டியை பலி செலுத்துவதற்காக மேலே போனான். மேலே போய்க் கொண்டிருக்கும் போது அவன் ஆசாரியனைச் சந்தித்தான், அந்த ஆசாரியன், குருடனாகிய பர்திமேயுவே, நீ எங்கே போகிறாய்?" என்று கேட்டான். அதற்கு அவன், "ஆசாரியரே, என்னுடைய ஆட்டுக்குட்டியைப் பலி செலுத்தும்படியாக மேலே தேவாலயத்திற்குப் போகிறேன். தேவன் நேற்று இரவில் என்னுடைய பிள்ளையைச் சுகமாக்கினார், நான் என்னுடைய ஆட்டுக்குட்டியை பலி செலுத்தப் போகிறேன், ஏனென்றால் நான் அவருக்குக் வாக்குக் கொடுத்திருக்கிறேன்" என்று கூறினான். 9. அவன் "குருடானாகிய பர்திமேயுவே, உன்னால் அந்த ஆட்டுக்குட்டியைப் பலி செலுத்த முடியாது. அந்த ஆட்டுக்குட்டிக்காக நான் உனக்குக் கொஞ்சம் பணத்தைத் தருகிறேன், நீ மேலே விலைக்கு வாங்குபவர்களிடம் சென்று, ஒரு ஆட்டுக்குட்டியை விலைக்கு வாங்கி, அந்த ஆட்டுக்குட்டியை பலி செலுத்து, ஏனென்றால் உன்னால் அந்த ஆட்டுக்குட்டியை பலி செலுத்த முடியாது" என்றான். அதற்கு இவன், ஆசாரியரே, நான் ஒரு போதும் தேவனிடம் ஒரு ஆட்டுக்குட்டியை என்று வாக்குக் கொடுக்கவில்லை. அவரிடம் நான் இந்த ஆட்டுக்குட்டியை தான் வாக்குக் கொடுத்தி ருக்கிறேன்" என்றான். 10. அநேக நேரங்களில், நாம் எப்போதுமே ஏதோவொன்றைச் செய்ய முயற்சித்துக் கொண்டிருக்கிறோம். நீங்கள் அறிய வேண்டியது, தேவனுக்கு தேவை உங்களுடைய வரமோ அல்லது உங்களுடைய பணமோ அல்ல, நீங்கள் தான் தேவனுக்கு தேவை. நீங்கள் பாருங்கள் புரிகிறதா? அவன், "நான் இந்த ஆட்டுக்குட்டியைக் அவருக்குக் கொடுப்பேன் என்று தான் அவரிடம் வாக்குப் பண்ணியிருக்கிறேன்" என்றான். அவன் (ஆசாரியன்), "நீ அந்த ஆட்டுக்குட்டியை அவருக்குக் கொடுக்க முடியாது; அந்த ஆட்டுக்குட்டி உன்னுடைய கண்கள் அன்றோ" என்றான். 11. இவன், "ஓ, தேவனுடைய ஆசாரியரே, குருடான பர்திமேயு தேவனுக்கு ஒரு வாக்குப் பண்ணியிருப்பான் என்றால், நான் என்னுடைய வாக்கைக் காத்துக் கொண்டிருக்கிறேன். குருடனாகிய பர்திமேயுவின் கண்களுக்காக தேவன் ஒரு ஆட்டுக்குட்டியை அருளுவார்" என்றான். 12. அது தான் நடந்தது. தேவன் குருடனாகிய பர்திமேயுவின் கண்களுக்காக உலகம் உண்டானது முதல் அடிக்கப்பட்ட தேவனுடைய ஆட்டுக் குட்டியானவர் ஒரு ஆட்டுக்குட்டியை அருளியிருந்தார். பர்திமேயு தேவனால் அருளப்பட்ட ஆட்டுக்குட்டியானவரிடம் இருந்து தன்னுடைய பார்வையைப் பெற்றுக் கொண்டான். 13. அந்த அதே ஆட்டுக்குட்டியானவர் தான் இன்றிரவு இங்கே இந்தக் கட்டிடத்திலுள்ள ஒவ்வொரு நபருக்காகவும் அருளப்பட்டிருக்கிறார். உலகம் உண்டானது முதல் அடிக்கப்பட்ட தேவனுடைய ஆட்டுக்குட்டியானவராகிய இயேசு கிறிஸ்து இன்றிரவு உங்கள் பாவங்களுக்காக அருளப்பட்டிருக்கிறார், அந்தப் பாவங்கள் எவ்வளவு கருப்பாக இருந்தாலும் பரவாயில்லை; அல்லது நீங்கள் எவ்வளவு வியாதிப் பட்டிருந்தாலும், அல்லது நீங்கள் எவ்வளவு உபத்திரவப் பட்டவர்களாக இருந்தாலும் பரவாயில்லை, அவர் உங்களுக்காக அருளப்பட்டிருக்கிறார், 14. அவர் இந்த உலகத்திலே இருந்த நாட்களில் நன்மை செய்கிறவராய் சுற்றித் திரிந்தார். அவர் தாம் ஒரு சுகமளிப்பவரென்று உரிமை கோரவில்லை என்பதை நாம் கண்டோம். தேவன் தாம் அவர் மூலமாக சுகமளித்தலைச் செய்தார் என்றும், என்ன செய்ய வேண்டுமென்று தேவன் முதலில் ஒரு தரிசனம் மூலமாக அவருக்குக் காண்பிக்கும் வரையில், அவர் அதில் ஒன்றையும் செய்யவில்லை என்றும் உரிமை கோரினார். அவர், 'மெய்யாகவே, மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், பிதாவானவர் செய்யக் குமாரன் காண்கிறதெதுவோ, அதையேயன்றி அதையேயன்றி வேறொன் றையும் தாமாய்ச் செய்ய முடியாது; குமாரனும் அந்தப் படியே செய்கிறார்" என்று கூறினார். அவர் உலகத்திலே இருந்த போது, அதுதான் அவருடைய ஊழியமாக இருந்தது. 15. அவர் லாசருவின் கல்லறைக்கு வந்த போது... லாசரு வியாதிப்பட்டிருக்கிறான் என்று அவர் முதலில் கேள்விப்பட்ட போது, அவர் அதை ஒரு போதும் மனிதன் மூலமாகக் கேள்விப்படவில்லை, அவர் அதை தேவன் மூலமாகவே கேள்விப்பட்டார். அவர், நம்முடைய சிநேகிதனாகிய லாசரு..." என்றார். அவன் மரித்துப் போயிருந்த போது என்று கருதுகிறேன். அவர், நம்முடைய சிநேகிதனாகிய லாசரு நித்திரையாக இருக்கிறான்; நான் அங்கே இல்லாததற்காக, உங்கள் நிமித்தமாக சந்தோஷப்படுகிறேன்; ஆனால் நான் போய் அவனை எழுப்புவேன்" என்றார். 16. அவர் கல்லறையண்டை வந்த போது, அவர், "பிதாவே, நீர் ஏற்கனவே எனக்கு செவி கொடுத்து விட்டீர் என்பதற்காக உமக்கு நன்றி செலுத்துகிறேன்: ஆனால் அருகில் நின்று கொண்டிருக்கிறவர்களின் நிமித்தமாக நான் இதைச் சொல்லுகிறேன்" என்றார். எந்த அடையாளங்களையோ அல்லது தேவனிடம் இருந்து எதாவது நடப்பிப்பதற்கு முன்பாக, ஜெபிக்கவும் அல்லது இவைகளைச் செய்யும்படி தேவனிடம் வேண்டுதல் செய்ய வேண்டுமென்று, ஒரு திருஷ்டாந்தத்திற்காக அதை அவர்கள் அறிந்து கொள்ளும்படி செய்தார்; ஆனால் என்ன நடக்கப் போகிறது என்பதை அவர் ஏற்கனவே தேவனிடமிருந்து பெற்றுக் கொண்டு விட்டதாகக் கூறினார். 17. அன்று வாழ்ந்த அதே இயேசு தான், லாசருவை கல்லறையிலிருந்து எழுப்பிய அதே இயேசு தான், பெரும்பாடுள்ள ஸ்திரீ வஸ்திரத்தைத் தொட்ட அதே இயேசு தான், அக்கினி சூளையில் எபிரெய பிள்ளைகளோடு இருந்த அதே இயேசு தான், யோசுவாவை எரிகோவின் வாசலுக்கு வெளியே சந்தித்த அதே இயேசு தான், அன்று இரவில் கடலின் மேல் நடந்து வந்த அதே இயேசு தான், வேதாகமத்தில் நேற்றும் இன்றும் என்றும் மாறாதவர் என்று கூறப்படும் அதே இயேசு தான் "இரண்டு அல்லது மூன்று பேர் என் நாமத்தினாலே எங்கே கூடியிருந்தாலும், நான் அவர்கள் மத்தியில் இருப்பேன்" என்று வாக்குத்தத்தம் பண்ணின அதே இயேசு தான் எரிகோவின் வாசல்கள் அருகே வந்த போது குருடனான பர்திமேயுவிற்கு பார்வையை அளித்தார். 18. இப்பொழுது, அது-அது ஒன்று சத்தியமாக இருக்க வேண்டும் அல்லது அது ஒரு பொய்யாக இருக்க வேண்டும். இயேசு மரணத்திலிருந்து உயிர்த்தெழாது இருந்திருப்பாரானால், அவர் மரணத்திலிருந்து உயிர்த்தெழாது இருந்தால், அவர் என்ன செய்வதாக வாக்குத்தத்தம் பண்ணினாரோ, அதை அவரால் செய்ய முடியாதிருந்திருக்கும். ஆனால் அவர் மரணத்திலிருந்து உயிர்த்தெழுந்திருந்து, நேற்றும் இன்றும் என்றும் மாறாதவரா யிருப்பதாக உரிமை கோருவாரானால், அவர் ஒவ்வொரு தலைமுறைக்கும் தம்முடைய தெய்வீக வாக்குத்தத்தத்தை, தம்முடைய வார்த்தையை காத்துக் கொள்ள கடமைப்பட்ட வராயிருக்கிறார். ஏனெனில் அவர், "கொஞ்ச காலத்தில், உலகம் இனி என்னைக் காணாது; ஆயினும் நீங்கள் என்னைக் காண்பீர்கள், நான் உலகத்தின் முடிவுபரியந்தம் உங்களோடு இருப்பேன்" என்று சொல்லியிருக்கிறார். அவர் அதற்கு கடமைப் பட்டிருக்கிறார்; அவர் தம்முடைய வாக்குத்தத்தங்களை ஒவ்வொரு தலைமுறைக்கும் நிறைவேற்றும் வரையில் அவருடைய வாக்குத்தத்தங்கள் குற்றம் உள்ளவைகளாகவே காணப்படும். 19. இது என்னுடைய கருத்தாயிருக்கிறது: நாம் பெயரளவிலான தெய்வீக சுகமளித்தலோடு அதிகமாக தொடர்பு வைத்திருக் கிறோம்; ஆனால் அது உண்மையானதை எடுத்துப் போட்டு விடாது. உங்களைச் சுகப்படுத்தக்கூடிய ஒரு மனிதனும் உலகத்தில் இல்லை. தேவன் இயேசுவை உலகத்திற்கு அனுப்பி, அவர் கல்வாரியில் மரித்த போது, தேவன் ஏற்கனவே அதைச் செய்து விட்டார். 20. எந்த மனிதனும் உங்களை இரட்சிக்க முடியாது; தேவன் மாத்திரமே அதைச் செய்ய முடியும்; அவர் ஏற்கனவே அதைச் செய்து விட்டார். இயேசு கல்வாரியில் மரித்த போது, அவர் நம்முடைய இரட்சிப்பிற்கும் சுகமளித்தலுக்கும் உண்டான கிரியைகளை கல்வாரியில் செய்து முடித்து விட்டார். மேலும் உங்களுடைய சரீரம் மற்றும் ஆத்துமாவையும் சுகமளித்து விட்டார். 21. அந்த அதே வார்த்தை தான் ஒவ்வொரு முறையும் உபயோகிக்கப்பட்டுள்ளது. இன்றிரவு நம்முடைய வார்த்தையை கவனித்தீர்களா? அவர், "உன் விசுவாசம் உன்னை இரட்சித்தது" என்றார். அங்கேயிருக்கும் அந்த கிரேக்க வார்த்தை சோசோ (SOZO) என்று அழைக்கப்படுகிறது. சோசோ என்பது இரட்சிப்பு மற்றும் தெய்வீக சுகமளித்தல் இரண்டிற்கும் உபயோகிக்கப் பட்டிருக்கிறது. நீங்கள் சரீரபிரகாரமாக இரட்சிக்கப்படவோ அல்லது ஆவிக்குரிய பிரகாரமாக இரட்சிக்கப்படவோ செய்கிறீர்கள், இரண்டில் ஒரு காரியம். 22. ஒரே பரிகாராமானது ஒரே மனிதரால் ஒரே நாளில் செய்யப்பட்டது. "அவர் நம்முடைய மீறுதல்களினிமித்தமாகக் காயப்பட்டார்; அவருடைய தழும்புகளால் குணமாகிறோம்." அது ஒன்றில் வேதாகம் சத்தியமாகவோ, அல்லது அது ஒரு பொய்யாகவோ இருக்க வேண்டும். உங்கள் அவிசுவாசத்தை மறைக்க முயல்வதற்கு, இந்த நாளிலோ, அல்லது வேறு எந்த நாளிலும், அதை முழுமையாக ஜனங்களுக்கு விளக்கிச் சொல்ல முயற்சிக்க எந்த அவசியமும் கிடையாது. அது இன்னும் தேவனுடைய வாக்குத்தத்தமாய் இருக்கிறது. 23. இந்த புஸ்தகத்திலுள்ள எழுத்துக்களில், நாசரேத்தான இயேசுவை... நான் விசுவாசியாவிட்டால். அவைகளில் எதையும் நீக்குவது அல்ல. நிறைவேறுதலுக்குக் கொண்டு வர எனக்குப் போதுமான விசுவாசம் இல்லாமல் இருக்கக் கூடிய அநேக வாக்குத்தத்தங்கள் அங்கே இருக்கலாம், ஆனால் அவைகள் அப்படியே அதே விதமாக உண்மையாகவே இருக்கின்றன. மேலும் நான் ஒரு போதும் விரும்புவதில்லை. யோசுவா நடந்து சென்ற இடத்தில் என்னால் நடக்க முடியவில்லை என்றாலோ, ஏனோக்கு தான் மரிக்க வேண்டியிராமல் ஒரு பிற்பகல் வேளையில் அப்படியே தேவனோடு கூட வீட்டிற்குப் போகும் அளவுக்கு அவன் நடந்த இடத்தில் என்னால் நடக்க இயலவில்லை என்றாலோ, அதைச் செய்ய எனக்கு விசுவாசம் இல்லாதிருந்தால், அதைச் செய்ய விசுவாசத்தைப் பெற்றிருக்கிற வேறு யாரோ ஒருவரின் பாதையில் நான் நிச்சயமாக நிற்க விரும்ப மாட்டேன், அல்லது கொஞ்சம் வேத சாஸ்திரம் மூலமாக அதை விளக்கிச் சொல்வதன் மூலம் அந்த சிக்கலைக் குறைக்க முயற்சிக்க மாட்டேன். அது சரியாக வெளிப்படுத்தப் பட்டு, உண்மையை தைரியமாக எதிர் கொண்டு, "எனக்கு விசுவாசம் இல்லை, ஆனால், இன்னுமாக, அது தேவனுடைய வார்த்தை தான். அவர் அதைச் செய்வதாகச் சொல்லியிருக்கிறார்' என்று கூறுவேன். நான் அதை அந்த விதமாக விசுவாசிக்கிறேன். 24. குருடனான பர்திமேயுவின் கூக்குரலை கேட்டு நிறுத்தப்பட்ட அதே இயேசுவை, இன்றிரவு உங்களாலும் அவரை நிறுத்த முடியும் என்று நான் விசுவாசிக்கிறேன். அவருடைய வஸ்திரத்தைத் தொட்ட அந்த அதே ஸ்திரீ, நம்முடைய பலவீனங்களைக் குறித்து நாம் பரிதவிப்பதின் மூலமாக, அவர் இன்னும் தொடப்பட முடியும். அப்படியே அவர் கூறிய வண்ணமாகவே அவர் செய்வார் என்று நான் விசுவாசிக்கிறேன். அவர் தேவனாக இருக்க வேண்டுமானால், அவர் தம்முடைய வார்த்தையைக் காத்துக் கொள்ள வேண்டும். 25. ப்பொழுது, அநேக நேரங்களில், நான் ஏதோவொன்றை உங்களிடம் கூற முடிந்து, அதை திரும்ப பெற வேண்டியதாயிருக்கும், ஏனென்றால் நான் வெறுமனே ஒரு மனிதன் தான். உங்களுடைய மேய்ப்பரால் உங்களிடம் காரியங்களைக் கூற முடிந்து, அவர் அதை திரும்ப பெற வேண்டியதாயிருக்கும். நீங்கள் உங்களுடைய அண்டை வீட்டாரிடமோ, அல்லது உங்கள் அன்பார்ந்தவர்களிடமோ காரியங்களைக் கூற முடிந்து, அதை நீங்கள் திரும்ப பெற வேண்டியதாக இருக்கும். ஆனால் தேவனால் தம்முடைய வார்த்தையை திரும்ப பெற முடியாது. அவர் தம்முடைய வார்த்தையை காத்துக் காத்துக் கொள்ள வேண்டும். அவர் தேவனாக இருக்க வேண்டுமானால், அதை அவர் காத்துக் கொள்ள வேண்டும். அவர் தாம் கூறினதை அவரால் திரும்ப பெற முடியாது. அவர் அதைக் காத்துக் கொண்டாக வேண்டும். அவர் அதற்குக் கடமைப் பட்டிருக்கிறார். 26. அந்தக் காரணத்தால் தான் இந்த மகத்தான பலியானது செலுத்தப்பட வேண்டியதாயிருந்தது. ஒரு மனிதர் எல்லாருக் காகவும் மரித்தார், ஏனென்றால் ஒரு மனிதன் பாவம் செய்து, எல்லா மனிதரையும் மரணத்திற்கு உட்பட கொண்டு வந்தான். மேலும் மனிதன்... நீங்கள் பாவத்தோடு இடைபடும் போது, நீங்கள் வியாதியோடும் இடைபட வேண்டியதா யிருக்கிறது, ஏனென்றால் வியாதியானது பாவத்தின் ஒரு தன்மையாக இருக்கிறது. வியாதி பாவத்தின் மூலமாக வந்தது. 27. ஆகையால், அந்தப் பாவ நிவிர்த்தியானது... நமக்கு அவசியமான எல்லாமே இருக்கும் இடமாகிய, கல்வாரியிலே தேவனால் செய்து முடிக்கப்பட்ட கிரியைகளில், உங்களுக்கிருக்கிற தனிப்பட்ட விசுவாசத்தோடு மாத்திரமே சம்பந்தமுள்ளதாக இருக்குமானால், கல்வாரியில் அவருடைய மரணத்தினால் கிடைத்த புனிதமான தன்மைகளாகிய தேவனுடைய தெய்வீக வாக்குத்தத்தின் பேரில் இளைப் பாறுகிறோம், அங்கே தான் நாம் சுகமடைகிறோம், இரட்சிக்கப் படுகிறோம். நாம் நிச்சயமாக அவைகளின் பேரில் நம்பிக்கை வைத்தாக வேண்டும். 28. நல்லது, உங்களைச் சுகப்படுத்த எனக்கு வல்லமை உண்டு" என்று கூறுவதன் மூலமாக உங்களைச் சுகப்படுத்தக் கூடிய எந்த மனிதனுமே கிடையாது. ஒரு மனிதன் அவ்வாறு கூறும் போது, அவன் தவறாயிருக்கிறான். 29. அங்கே வேதாகமத்தில், தேவன் மனிதர்களுக்கு சுகமாக்க வல்லமையை கொடுத்தார், அவர்களோ அதில் தவறிப் போனார்கள்; அது தான் அப்போஸ்தலர்கள். இயேசு, சுகமளிக்கும் படியான வல்லமையை இயேசு கண்டிப்பாக அப்போஸ்தலர் களுக்குக் கொடுத்தார் என்று வேதாகமம் வெளிப்படையாக கூறுகிறது (இது சர்ச் ஆஃப் கிறைஸ்ட் சபையைச் சேர்ந்த சகோதரர்களாகிய உங்களுக்கு தான், இது உங்களுக்கு). ஏறக்குறைய பத்து நாட்கள் கழித்து, அவர்கள் அதில் பரிதாபமாக தோல்வியடைந்தார்கள்; வலிப்பு வியாதியோடிருந்த ஒரு மனிதனை அவர்கள் கொண்டிருந்து, அந்தப் பிசாசுகளை அவனை விட்டுத் துரத்த முயன்றும் அவர்களால் அது கூடாமற் போயிற்று. இயேசு, எது வரைக்கும் உங்களிடத்தில் பொறுமையாய் இருப்பேன்? அவனை இங்கே கொண்டு வாருங்கள்" என்றார். அவர்கள், "ஏன் இதை எங்களால் செய்யக் கூடாமற் போயிற்று?" என்று கேட்டார்கள். அதற்கு அவர், "உங்களுடைய அவிசுவாசத்தின் நிமித்தமாகத் தான்" என்றார். எனவே, நீங்கள் பாருங்கள், விசுவாசமே ஜெயமாகும். நாம் அவருடைய வார்த்தையை விசுவாசிக்கிறோம். 30. இப்பொழுது, அவர் ஒரு போதும் வந்து, நமக்கு சுகமளிக்க வல்லமை தருவதாகச் சொல்லவேயில்லை, ஏனென்றால் நம்மால் அதைச் செய்ய முடியாது. பாவநிவிர்த்தி செய்யப்படுவதற்கு முன்பாகத் தான் சுகமளிக்கும்படியான வல்லமையை இயேசு அவர்களுக்குக் கொடுத்தார். ஆனால் அந்தப் பாவநிவிர்த்தி செய்யப்பட்டப் பிறகு, சுகமளித்தலானது என்றென்றுமாக நிறைவேற்றப்பட்டு விட்டது. இப்பொழுது, சுகமளித்தலாகிய பலன்களைக் கொண்டு வருகிற அந்தப் பாவநிவிர்த்தியில் தனிப்பட்டவர்கள் கொண்டிருக்கும் விசுவாசமாக அது இருக்கிறது. ஆமென். உங்களுக்கு அது தெளிவாகப் புரிகிறது என்று நம்புகிறேன். இன்று சுகமாக்க எந்த மனிதனுக்கும் எந்த வல்லமையும் கிடையாது. 31. இப்பொழுது... தேவன் சபையில் முதலாவது அப்போஸ்த லர்களை நியமித்திருக்கிறார், அல்லது, "மிஷனரிகள்" என்ற ஒரு மேலான வார்த்தையை உபயோகிப்பேனாக. ஆனால், மிஷனரிகள் ஏன் அப்போஸ்தலர்கள் என்று அழைக்கப் படுவதற்கு பதிலாக மிஷனரிகள் என்று அழைக்கப்படுதை விரும்புகிறார்கள் என்பது எனக்குத் தெரியவில்லை, அது சரியாக அதே காரியம் தான்: "அனுப்பப்பட்ட ஒருவன்." மிஷனரிகள், அப்போஸ்தலர்கள், தீர்க்கதரிசிகள், போதகர்கள், சுவிசேஷ கர்கள்: சபையும் சரீரமும் பரிபூரணம் அடைவதற்காக இந்த வரங்கள் எல்லாமே சபையை மற்றும் சரீரத்தை பூரணப்படுத் துவதற்காக சர்வ வல்லமையுள்ள தேவனால் சபையில் நியமிக்கப்பட்டிருக்கிறது. 32. அவைகள் ஒவ்வொன்றும், பிரசங்கியார் வார்த்தையைப் பிரசங்கம் பண்ணுவது போன்று இருக்கிறது: விசுவாசம் கேள்வியினாலே வரும், கேள்வி வார்த்தையினால் வரும்." அதன்பிறகு மற்ற மனிதனோ, அவனுக்கு போதிக்கும்படியான ஒரு வரம் இருக்கிறது, எனவே அவன் போதிக்கிறான். அதன் மூலமாக, அவன் ஜனங்களுக்கு விளக்கிக் கூறுகிறான்: 'விசுவாசம் கேள்வியினாலே வரும், கேள்வி வார்த்தையினால் வரும்." 33. வேறொன்று, தரிசனங்களைக் காணும் படியாகவும், காரியங்களை முன்னுரைக்கும் படியாகவும், காரியங்களை முன்பாகவே சொல்லும் படியாகவும் தெய்வீகப் பிரகாரமாக நியமிக்கப்பட்ட ஒரு தீர்க்கதரிசி அல்லது ஒரு ஞானதிருஷ்டிக்காரன். அந்த மனிதனால்... முடியும். அவனால் சுகமளிக்க முடியாது, அவனால் முன்னுரைக்க மாத்திரமே. ஆனால் அவைகள் எல்லாம் எதைச் செய்கின்றன? இயேசு கிறிஸ்து மரணத்திலிருந்து உயிர்த்தெழுந்து விட்டார் என்பதைத் தான் அவை காண்பிக்கின்றன. அது சரியே. அவர் இன்று நம்மோடு கூட இருக்கிறார். 34. இப்பொழுது, நாம் நம்முடைய அலுவல்களில் உறுதியாக நின்று, தேவன் நமக்கு சொல்லுகிறபடியே செய்து, வலதுபுறமோ இடதுபுறமோ நோக்காமல், முன்னோக்கி கல்வாரியையே பார்ப்போமானால், தேவன் நமக்காக அற்புதங்களை நடப்பிப்பார். நாம் அந்த நாளில் இருக்கிறோம். நாம் நிச்சயமாகவே அதை எதிர்பார்த்து, அறிந்து, உங்கள் ஆத்துமாவின் சுகத்திற்கும், உங்கள் சரீரத்தின் சுகத்திற்கும் இருபுறங்களிலும் அதிக மூடபக்தி வைராக்கியத்தால் கட்டப்பட்டிருக்கிறது என்பதை நாமே அறிந்தும் இருக்கிறோம், ஆனால் இன்னுமாக, இயேசு கிறிஸ்து மரணத்திலிருந்து உயிர்த்தெழுந்து, தாம் இங்கே உலத்தில் இருந்த போது, அவர் செய்த அதே கிரியைகளையும் அதே அடையாளங்களையும் வெளிப்படுத்திக் காண்பிக்கிறார். 35. மனிதனால் ஒழுங்கு முறையின்றி, தான் விரும்பின எதையும் செய்ய முடியும் என்பது ஒரு போதும் இருக்கவே இருக்காது, அவ்வாறு ஒரு போதும் இருந்ததில்லை, ஒரு போதும் அப்படிப்பட்ட ஒரு நேரம் இருக்கவே இருக்காது. இயேசு கிறிஸ்துவினால் தாமாக அதைச் செய்யக் கூடாதிருந்தது. கர்த்தராகிய இயேசு கிறிஸ்து வாழ்ந்த வாழ்க்கைக்கும் மேலாக வாழ்ந்த எந்த மனிதனும் உலத்தில் இல்லை, அல்லது எக்காலத்திலும் அவ்வாறு வாழ்கிறவர்கள் இருக்கவும் மாட்டார்கள், ஏனென்றால் அவர் தேவனுடைய பரிபூரண குமாரனாகவும் பூரண பலியாகவும் இருந்தார். அவர் தாமாகவே எதையும் செய்ய முடியாது என்று மீண்டும் மீண்டுமாக, அடிக்கடி வெளிப்படையாக சொல்லி வந்தார். அவர், நான் நானாக எனக்குள் ஒன்றும் செய்வதில்லை, நானாக எதையும் செய்ய முடியாது, ஆனால் பிதாவானவர் செய்ய நான் காண்கிறதை, குமாரனும் அந்தப்படியே செய்கிறார். நான் செய்கிறேன்... என் பிதா கிரியை செய்து வருகிறார், நானும் இந்நேரம் வரை கிரியை செய்து வருகிறேன். அவர் என்னிடம் கூறும் வரை அல்லது அவர் எனக்குக் காண்பிக்கும் வரை நான் எதையும் செய்வதில்லை. என் நியாயத்தீர்ப்பு உண்மையா யிருக்கிறது: ஏனென்றால் அதைச் செய்து கொண்டிருப்பது நானல்ல, அது என் பிதாவானவரே. நானும் என் பிதாவும் ஒன்றாயிருக்கிறோம்" என்றார். நிச்சயமாக. 36. அவர் பேசின போது, அது தேவன் பேசிக் கொண்டிருப்பது போன்று அதே விதமாக இருந்தது, ஏனென்றால் தேவன் உலகத்தைத் தன்னுடன் ஒப்புரவாக்குவதற்காக, தேவன் கிறிஸ்துவுக்குள் இருந்தார். இன்றிரவு, ஒரு மனிதன் தேவனுடைய ஆவியினால் உண்மையாகவே அபிஷேகிக்கப் பட்டவனாக, தேவனுடைய வார்த்தைகளை பிரசங்கிப்பானால், தேவன் தாமே தம்முடைய சொந்த வார்த்தைகளால் பேசுவது போல இருக்கும். 37. ஒரு மனிதன் ஒரு ஞானதிருஷ்டிக்காரனாகவோ, அல்லது ஒரு தீர்க்கதரிசியாகவே இருந்து, ஒரு தனிப்பட்ட நபரிடம் வித்தியாசமான ஏதோ ஒன்றையோ, அல்லது அவர்களுக்கு உதவி செய்ய ஏதோவென்றையோ சொல்லி, அது சத்தியம் என்று அவர்கள் காண்பார்களானால், அப்படியானால், அது தேவன் இரண்டாம் நிலையில் பேசிக் கொண்டிருப்பதாகும். அந்த மனிதன் சொல்லுவது பொருத்தமாக இல்லாமலும், அது வேதாகமத்தோடு ஒத்துப் போகாமலும் இருந்தால், அந்த மனிதன் தவறாயிருக்கிறான். ஆனால் அது வேதாகமத்துடன் ஒத்துப் போகுமானால், அது அந்த தனிப்பட்ட நபருக்கு அருளும் தேவனுடைய வார்த்தையாகும். உங்களுக்குப் புரிகிறதா? என் ஜனங்களே, இயேசு கிறிஸ்து உங்களை ஆசீர்வதிப்பாராக. நான் உங்களை நேசிக்கிறேன். 38. நாம் என்றைக்கு இந்த உலகத்திலிருந்து நம் ஒவ்வொருவரையும் அழைத்துக் கொள்வார் என்று நமக்குத் தெரியாது. அப்போது, நீங்கள் போகும் போது, நான் முதலாவது போவேனா அல்லது நீங்கள் போவீர்களா என்று நமக்குத் தெரியாது, ஒரு காரியம் நிச்சயம், ஒரே தரம் மரிப்பதும், அதன் பின்பு நியாயத்தீர்ப்பு அடைவதும் மனுஷனுக்கு நியமிக்கப்பட்டிருக்கிறது என்பது நமக்குத் தெரியும். அந்த நாளில் நாம் அவருடைய பிரசன்னத்தில் நிற்க வேண்டும். நான் உங்கள் முன்பாகவும், நீங்கள் எனக்கு முன்பாகவும் நிற்க வேண்டும், நாம் இருவருமே கிறிஸ்துவுக்கு முன்பாக நிற்க வேண்டும். 39. நான் என்னுடைய இருதயத்தின் ஆழத்திலிருந்து, என்னுடைய இருதயத்திலிருந்து உங்களுக்குச் சொல்லிக் சொல்லிக் கொண்டிருக்கிறேன், இயேசு கிறிஸ்து, அவர் தேவனுடைய குமாரன் என்றும், அவர் மரித்து மறுபடியும் உயிரோடெழுந்து, ஆவியின் ரூபத்திற்குள் திரும்பி சென்றார் என்றும், இன்றைக்கு சபைக்குள் ஜீவிக்கிற பரிசுத்த ஆவியின் ரூபத்தில் வந்திருக்கிறார் என்றும், அவர் இங்கே பூமியின் மேல் இருந்த போது, செய்த அதேவிதமாக அதே காரியங்களை செய்து நடப்பிக்கிறார் என்றும் நான் விசுவாசிக்கிறேன். நான் அதை என்னுடைய முழு இருதயத்தோடும் விசுவாசிக்கிறேன். 40. அது மட்டுமல்ல, நான் என்னுடைய ஜீவியத்தில் எப்பொழுதாகிலும் சாட்சி கூறுவதிலேயே இது தான் கடைசி நேரமாக இருக்குமானால், என்னுடைய சாட்சி உண்மையாக இருக்கிறது. நான் இதை நானாகவே சொல்லவில்லை. அவ்வாறு நானாகவே சொன்னால், நான் தவறாக இருந்திருப்பேன். நான் என்னை குறித்து எதுவும் சொல்லவில்லை, ஆனால் நான் கிருபையால் இரட்சிக்கப்பட்ட ஒரு பாவி அவ்வளவு தான். 41. குருடனான பர்திமேயுவைக் குணமாக்கின அதே தேவன் என்னையும் சுகப்படுத்தினார். அவர் மற்றவர்களையும் சுகப்படுத்துகிறார். நான் யாரையும் சுகப்படுத்தினதில்லை. என்னால் யாரையும் சுகப்படுத்தவும் முடியாது, ஆனால் அவர் சுகப்படுத்துகிறார். அவர் சுகப்படுத்தியிருக்கிறார். விசுவாசத்தின் மூலமாக, ஜனங்கள் அதை ஏற்றுக் கொண்டு, சுகத்தைப் பெற்றுக் கொள்கிறார்கள். 42. இப்பொழுது, ஒரு குழந்தையாய் இருந்த போது அந்த ஒளியானது தோன்றினது, அது என்னவென்று எனக்குத் தெரியாதிருந்தது. நான் என்னுடைய தாயாரால் பிறப்பிக்கப்பட்ட அதே காலையில் அது தோன்றினது. ஓ, நம்மிடம் நிறைய காரியங்கள் இருக்கின்றன என்பது எனக்குத் தெரியும், ஆனால் நான் மற்ற காரியங்களைக் குறித்துப் பேசிக் கொண்டிருக் கவில்லை. நான் என்னுடைய சொந்த காரியங்களுக்காக மாத்திரமே பதில் சொல்ல வேண்டியிருக்கிறது. அது அது அந்த அறைக்குள் வந்தது. 43. ஒரு சிறு பையனாக, ஒரு பாவியாக, இதைக் காண்பதைக் குறித்து ஜனங்களிடம் நான்-நான் சொல்லத் தொடங்கினேன். ஜனங்களோ அதை விசுவாசிக்கவில்லை; நிச்சயமாக விசுவாசிக்கவில்லை. அதன் பிறகு, சம்பவித்துக் கொண்டிருந்த காரியங்களை அது எவ்வாறு முன்னுரைத்தது என்பதை அவர்கள் கவனிக்கத் தொடங்கினார்கள், எனக்கு 46 வயதாகிறது, ஒருக்காலும், ஒரு தடவையாகிலும், அந்த வருடங்களில், ஒரு துளியளவும் அது ஒரு போதும் ஒரு முறையாகிலும் தவறிப் போனதில்லை. 44. ஏற்கனவே எழுதப்பட்டிருந்த தீர்க்கதரிசனங்கள், அப்படியே சரியாக எவ்வாறு நிறைவேறும் என்பவை அச்சடிக்கப்பட்டு எழுதப்பட்ட பத்திரிகை இன்றிரவு உங்களுக்குக் கிடைத்தது. அது அவ்வாறு நிறைவேறுகிறதா இல்லையா என்று கவனித்துப் பாருங்கள். புரிகிறதா? அது நிறைவேறுகிறதா என்று பாருங்கள். அது கூறுகிற விதமாகவே அது எழுத்துக்கு எழுத்து அப்படியே நிறைவேறும். அது ஒரு போதும் தவறிப் போனதில்லை. அது என்னவாக இருக்கிறது? அது நானல்ல, அது அவராக இருக்கிறது. 45. அதன் பிறகு அந்த நதியில், நான் பாப்டிஸ்டு சபையில் முதலாவது நியமிக்கப்பட்ட போது (இருபத்து மூன்று வயதுடைய பையனாகவோ, அல்லது மனிதனாகவோ இருந்தேன்), நான் நதியில் 500 பேருக்கு ஞானஸ்நானம் கொடுத்துக் கொண்டிருந்த போது, அந்த நாளில் தேவன் இறங்கி வந்து, அந்த அதே ஒளியில் தோன்றினார். செய்தித்தாள்கள் அதைக் குறித்த கட்டுரைகளை சுமந்து சென்றன. அதன் பிறகு, அவர்கள், ஓ, நல்லது, அது மனோசாஸ்திரமாக இருக்கலாம்" என்று கூறினார்கள். 46.அது கூட்டங்களுக்குள்ளும், ஜனங்களுக்குள்ளும் வந்த போது, சில ஜனங்கள் தேவனோடு மிகவும் நெருக்கமானார்கள், அல்லது, அது அதுவாக இல்லாமல் இருக்கலாம், அது அவர்களுக்காக இருந்திருக்கலாம். சில ஜனங்களால் காரியங்களைக் காண முடிகிறது. சிலரால் காரியங்களைக் காண முடியவில்லை. 47. அந்தப் பெரிய நட்சத்திரமானது மேலாக கடந்து சென்றபோது, வானிலை ஆய்வுக்கூடங்கள் எல்லாவற்றிலும் யாருமே... யாருமே அதைக் காணவில்லை. அந்த சாஸ்திரிகள் உண்மையாகவே ஒரு நட்சத்திரத்தைப் பின் தொடர்ந்தார்கள் என்று எத்தனை கிறிஸ்தவர்கள் விசுவாசிக்கிறீர்கள்? நாங்கள் உங்கள் கரத்தைக் காணட்டும். சரித்திரமானது எந்தவிடத்திலும் அதை மேற்கோள் காட்டவில்லை, வேதாகமத்திலும் வேறு எந்தவிடத்திலும் அது இல்லை, வேறெந்த இடத்திலும் இல்லை, ஆனால் அந்த சாஸ்திரிகளுக்கு, இந்த நட்சத்திரத்தைக் காண அவர்களுக்கு அருளப்பட்டிருந்தது, அவர்கள் நட்சத்திரங்கள் மூலமாக நேரத்தை கணக்கிட்டார்கள், அது மேலாக கடந்து சென்று, இயேசுவுக்கு இரண்டு வயதாக இருந்த போது, அவர் மேல் தொங்கினது. 48. இப்பொழுது, மறுபடியும் கவனியுங்கள், அந்த ஜனங்களைக் கைது செய்யும்படியாக, பவுல் தமஸ்குவுக்குப் போகும் தன்னுடைய பாதையில் இருந்தபோது, ஒரு மகத்தான வெளிச்சமானது அவனுக்கு அவனுடைய முன்னால் பளிச்சிட்டது, அது கண்களுடைய பார்வையை அற்றுப் போகும்படிக்குக் கூட செய்யும்படியாக மிகவும் பிரகாசமாயிருந்தது. போர் சேவகர்களும், மற்றவர்களுமான அந்த மனிதர்கள் அங்கே அவனைச் சுற்றிலும் நின்று கொண்டிருந்தும், அவர்களால் எந்த ஒளியையும் காண முடியவில்லை. அவர்களுக்கு அந்த ஒளியைக் குறித்து எதுவும் தெரியாதிருந்தது, ஆனால் அது பவுலுடைய கண்களுடைய பார்வையை அற்றுப் போகச் செய்யும் அளவுக்கு அது பவுலுக்கு மிகவும் உண்மையாக இருந்தது; மற்ற சாவுக்குரிய மனிதர்கள் சரியாக அங்கே நின்று கொண்டு, பார்த்து, தங்கள் கண்களை அலட்டிக் கொண்டு இருந்தும், அவர்களால் ஒரு காரியத்தையும் காண முடியவில்லை. பாருங்கள்? ஆகையால், மேடையிலோ அல்லது அது எங்கிருந்தாலும், இயேசு கிறிஸ்து.... அந்த ஒளி யாராக இருந்தது? இயேசு கிறிஸ்து. "நான் துன்பப்படுத்துகிற அது யார், கர்த்தாவே?" 49. அவர், "நான், இயேசு, முள்ளில் உதைக்கிறது உனக்குக் கடினமாம்" என்றார். பாருங்கள்? அது பவுலுக்கு மிகவும் உண்மையாக இருந்த ஒரு ஒளியின் வடிவத்தில் இருந்த இயேசு. அது அவனுடைய கண்களுடைய பார்வையை அற்றுப் போகச் செய்தது. ஆனால் சுற்றிலும் நின்று கொண்டிருந்த ஜனங்களால் அதைக் காண முடியாதிருந்தது. 50. அநேக நேரங்களில், தொடர்ச்சியாக ஒவ்வொரு இரவும், சரியாக வெளிப்படையாகச் சொன்னால், நான் அதே காரியத்தைப் பார்த்து இரண்டு நொடிகள் கூட ஆகவில்லை. அது சரியே. அந்த அதே காரியமானது சரியாக இப்பொழுது நான் நின்று கொண்டிருக்கும் இடத்திலிருந்து இரண்டு அடி தூரத்திற்கும் அருகில் தான் இருக்கிறது. ஆனால் நீங்கள் பாருங்கள், அது வேறொரு பரிமாணத்தில் இருக்கிறது. பாருங்கள்? அது ஒரு... அது அது சிலருக்காக கொடுக்கப் பட்டிருக்கிறது, பிறகு, தேவன் தம்முடைய அன்பிலும் இரக்கத்திலும் அதைக் கொடுத்திருக்கிறார், என் நிமித்தமாக அல்ல, நான் ஒரு தகுதியற்ற ஏழை சிருஷ்டியாக இருக்கிறேன் (இல்லை, ஐயா), ஆனால் சபையின் நிமித்தமாகவும் ஜனங்களின் நிமித்தமாகவும் தான் அது கொடுக்கப் பட்டிருக்கிறது, ஏனென்றால் நியாயத்தீர்ப்பின் நாளிலே உங்களுக்கு ஒரு சாக்குப் போக்கும் இருக்காது, 51. சிறந்த அமெரிக்க புகைப்படக் கலைஞர் சங்கம், அதை எடுத்த பல செய்தித்தாள்களுக்குப் பிறகு, அதை தங்கள் கேமராவில் பிடித்தது. அதன் பிறகு டெக்ஸாஸிலுள்ள ஹூஸ்டனில் ஒரு இரவில், தேவன் தம்முடைய குமாரனுடைய புகைப்படத்தை, பரிசுத்த பவுல் அவரைக் கண்ட அதே உருவத்தில், புகைப்படம் எடுக்க அனுமதித்தார். கைரேகை மற்றும் தஸ்தாவேஜ்கள் சம்பந்தப்பட்ட ஜார்ஜ் ஜே. லேஸி அவர்கள் அதைப் பெற்று, கலிபோர்னியாவில் இருந்து டெக்ஸாஸிலுள்ள ஹூஸ்டனுக்கு வந்து, அதை ஷெல் கட்டிடத்திற்குள், ஆய்வகத்திற்குள்ளே வைத்து, அல்ட்ரா கதிர் வெளிச்சங்களின் கீழேயும் மற்ற எல்லாவற்றின் கீழேயும் தொடர்ந்து பல நாட்கள் வைத்து அதை ஆய்வு செய்து விட்டு, வெளியே நடந்து வந்து (அவர் உறுதியாக என்னைக் குற்றம் கண்டு பிடிப்பவராயிருந்தவர்) என்னுடைய கையைக் குலுக்கி, "சகோதரன் பிரன்ஹாமே, அந்த வெளிச்சமானது லென்சில் பட்டிருக்கிறது. அது அங்கே இருந்தது. இந்த புகைப்படக்கருவியின் இயந்திரக் கண்ணானது மனோ சாஸ்திரத்தை புகைப்படம் எடுக்காது. அந்த ஒளி அங்கே இருந்தது" என்றார். 52. நான் இன்றிரவு மரித்தாலும், என்னுடைய சாட்சி உண்மையாக இருக்கிறது: என்னுடைய சகோதரனே, நீங்கள் மாத்திரம் நோக்கிப் பார்த்து பிழைத்துக் கொள்வீர்களானால், குருடனாகிய பர்திமேயுவிற்கு அருளப்பட்ட அதே ஆட்டுக் குட்டியானவர் இன்றிரவு உங்களுக்கு அவசியமான ஒவ்வொன்றிற்கும் அருளப் பட்டிருக்கிறது. நோக்கிப் பார்த்து பிழைத்துக் கொள்ளுங்கள். நாம் ஜெபம் செய்யலாமா? 53. இயேசுவை மரணத்திலிருந்து மீண்டும் கொண்டு வந்து, அவரை மூன்றாம் நாளில் உயிரோடு எழுப்பின, அன்புள்ள தேவனே, ஏனென்றால் உமது தீர்க்கதரிசியாகிய தாவீது, அவர் அழிவுக்கு உள்ளாக மாட்டார் என்றும், நீர் அவருடைய ஆத்துமாவை பாதாளத்தில் விடமாட்டீர் என்றும் சொல்லியிருக்கிறான், எனவே அவர் தன்னுடைய சரீரம் அழிந்து போவதற்கு முன்பாகவே உயிர்த்தெழுந்தார். 54. மேலும் அவர், தாம் இங்கே பூமியின் மேல் இருந்தபோது, "நான் தேவனிடத்திலிருந்து வந்தேன்" என்றார். நிச்சயமாக, வனாந்தரத்தில் அந்தப் புத்திரர்களோடு இருந்த அந்த மகத்தான ஷெக்கினா ஒளி அவர் தான். மேலும் அவர், "நான் தேவனிடத்திற்கே திரும்பிப் போகிறேன்" என்றார், தமஸ்குவுக்குப் போகும் பாதையில் பவுலைச் சந்தித்த அந்த மகத்தான ஷெக்கின ஒளி 55. இன்றும், தவறிப்போகாத நிரூபணங்களின் மூலமாக, நீர் இங்கேயிருக்கிறீர் என்றும், நீர் உம்முடைய ஜனங்களை விட்டுப் விலகவில்லை என்றும், உமது ஜனங்கள் தான் உம்மை விட்டுப் விலகிப் போயிருக்கிறார்கள் என்று இயந்திரக் கருவிகளாலும், பரிசுத்த ஆவியின் சாட்சியினாலும் அதை நிரூபித்து வருகிறீர். எல்லா காரியங்களுக்கும் நாங்கள் எங்களுடைய புலன்களின் பேரிலேயே நம்பிக்கை வைக்கும் அளவுக்கு நாங்கள் மிகவும் மந்தமுள்ளவர்களாகவும், புலன்களால் கட்டப்பட்ட வர்களாகவும் இருக்கிறோம். 56. அன்புள்ள பிதாவே, இன்றிரவு இங்கேயிருக்கும் ஒவ்வொரு மனிதனும், ஸ்திரீயும், பையனும், சிறு பெண் பிள்ளையும், பூமியோடு கட்டப்பட்டிருக்கிற இந்நிலையிலுள்ள புலன்களை விட்டு வெளியே அடியெடுத்து வைத்து, அதோ அங்கே கல்வாரியை நோக்கி பார்த்து, நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராகிய தேவ குமாரனாகிய இயேசுவை அறிந்து கொள்வார்களாக. 57. பிதாவாகிய தேவனே, நீர் இன்றிரவில் அந்த மகத்தான ஷெக்கினாவாகிய அவரை அனுப்பும் படியாக ஜெபிக்கிறேன். அது தான் இந்தக் கட்டிடத்தைச் சுற்றிலும் அசைவாடிக் கொண்டிருக்கிறது என்பதை அந்த ஜனங்கள் கூறக் கூடும்படியாக அவர் தாமே இந்தக் கட்டிடத்திற்குள் மிக நெருக்கமாக வருவாராக. அந்தக் காரணத்தினால் தான், அவர்களுடைய ஆவிகள் இந்த நேரத்திலும் கூட கலங்குகிறது, அது அவர் இங்கே இருப்பதின் நிமித்தமாகத் தான். சற்றே சந்தேகம் கொள்கிற அந்த மனிதனுக்கு, நீர் இங்கேயிருக்கிறீர் என்றும், சென்று போன நாட்களில், உமது குமாரனாகிய கிறிஸ்து இயேசுவோடிருந்து நீர் செய்தவைகளை இன்றிரவு உமது சபையோடும் அதே காரியங்களைச் செய்கிறீர் என்றும், நிரூபித்துக் காட்டும் படியாக, அவருடைய சகல மகத்துவமுமுள்ள பிரசன்னமானது இந்தத் தகுதியற்ற ஏழை நபரை இன்றிரவில் அபிஷேகம் பண்ணுவதாக; அவர் நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறார். 58. கர்த்தாவே, எங்கள் பாவங்களை எங்களுக்கு மன்னித்தருளும், உம்முடைய ஊழியக்காரர்களாக இருக்க எங்களுக்கு உதவி புரிந்தருளும். இந்த ஜனங்களை ஆசீர்வதித்து, அவர்களை தாழ்மையுள்ள இருதயம் உள்ளவர்களாக, சுவிசேஷத்தை ஏற்றுக் கொள்பவர்களாக ஆக்கும். நாங்கள் இதை உமது நேச குமாரனாகிய இயேசுவின் நாமத்தில் வேண்டிக் கொள்கிறோம். ஆமென். ஒரு சகோதரி வேறு பாஷையில் பேசுகிறார்கள், அதன் பிறகு வியாக்கியானம் கொடுக்கப்படுகிறது. அல்லேலூயா. விசுவாசிக்க மாத்திரம் செய்திடுவாய், விசுவாசிக்க மாத்திரம் செய்திடுவாய், யாவும் கைகூடிடும், விசுவாசிக்க மாத்திரம் செய்திடுவாய்; விசுவாசிக்க மாத்திரம் செய்திடுவாய், விசுவாசிக்க மாத்திரம் செய்திடுவாய், யாவும் கைகூடிடும், ... மாத்திரம். 59. இப்பொழுது, பிள்ளைகளே, அவரை உங்கள் முழு இருதயங்களோடும் விசுவாசியுங்கள். பாவம் என்பதன் விளக்கத்தின் கீழாகப் பார்த்தால், அதற்கு "அவிசுவாசம்" என்று அர்த்தமாகிறது. அங்கே ஒரே ஒரு பாவம் தான் உண்டு, அது தான் அவிசுவாசம். மற்ற எல்லா....இந்த ஒழுக்கமற்ற நடக்கைகள் அவிசுவாசம் என்ற அந்த ஒன்றின் தன்மைகள் மாத்திரமே. "விசுவாசியாதவனோ ஏற்கனவே ஆக்கினைத் தீர்ப்புக்குட் பட்டாயிற்று." புரிகிறதா? நீங்கள் நிச்சயமாக விசுவாசித்தே ஆக வேண்டும். 60. இப்பொழுது, நாம் வியாதிப்பட்டுள்ள ஜனங்களில் சிலருக்காக ஜெபிக்கப் போகிறோம். அவர்கள் ஜெப அட்டைகளை விநியோகித்தார்கள் என்று நம்புகிறேன். அவர்கள் நேற்று, நூறு ஜெப அட்டைகளை விநியோகித்திருக்கிறார்கள் என்று நம்புகிறேன். எனவே நாம் துவங்குவோம்... சென்ற இரவில் நாம் நூறிலிருந்து துவங்கினோமா? அது சரியல்லவா? நாம் நூறுக்குச் சென்று, பின்னோக்கி வந்தோம். இல்லையா? அல்லது ஏதோவொன்றா? நாம் எண் X ஸில் இருந்து தொடங்கலாம், அதன் பிறகு, இன்றிரவு, ஏறக்குறைய... வரை மேலே போகலாம். யாரிடம் ஜெப அட்டை எண் ஒன்று இருக்கிறது? எண் ஒன்று? எண்... இனியவளே உன் இருதயம் ஆசீர்வதிக்கப் படுவதாக. ஒரு சிறுமி தன்னுடைய கரத்தை மேலே உயர்த்தினாள். தேவன் அந்தச் சிறு பிள்ளையை ஆசீர்வதிப்பாராக. சரி, எண் ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு, ஐந்து, ஆறு, ஏழு, எட்டு, ஒன்பது, பத்து. நீங்கள் விரும்பினால், அவர்கள் முதலாவது நிற்கட்டும். பியானோ இசைக்கருவி மீட்டுபவர், அல்லது ஆர்கன் இசைக்கருவி இசைப்பவர் (என்னை மன்னியுங்கள், சகோதரியே), மறுபடியுமாக, விசுவாசிக்க மாத்திரம் செய்திடுவாய் என்ற பாடலுக்கு இசைப்பீர்களா, நீங்கள் அவ்வாறு செய்வீர்களா? 61. X எண் ஒன்று முதல் 10 வரை. இவர்கள் தங்கள் இடத்தை எடுத்துக் கொண்டிருக்கையில், எத்தனை பேர்... இப்பொழுது, உங்களால் எழுந்து நிற்க முடியாவிட்டால், உங்கள் எண் அழைக்கப்படும் போது, உங்களால் எழுந்து நிற்க முடியாவிட்டால், அப்படியே உங்கள் கரத்தை உயர்த்துங்கள். உங்கள் எண் அழைக்கப்படும் போது, உதவியாளர்கள் உங்களை அழைத்து வருவார்கள். x ஒன்று முதல் பத்து வரை. 62. இப்பொழுது, சரியாக இப்பொழுது, பரிசுத்த ஆவியானவர் இங்கே இருக்கையில், இங்கே உள்ளே எத்தனை பேர், நான்... இது பரிசுத்த ஆவியானவர் என்று நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? நிச்சயமாக. "தேவனே, நான் ஒரு பாவி, இப்பொழுது நீர் என்னை நினைவு கூர வேண்டுமென்று விரும்புகிறேன்" என்ற இதன் மூலமாக, இவ்வாறு கூறுகிற, ஒரு பாவியான நண்பர் இங்கே உள்ளே இருக்கிறீர்களா? நான்-நான், நாங்கள் உங்களை பீடத்திற்கு அழைக்க மாட்டோம். பீட ஆராதனைகள் அருமையானவை தான். நாங்கள் அதில் விசுவாசமுள்ளவர்கள். ஆனாலும், "விசுவாசித்தவர்கள் எத்தனை பேர்களோ அத்தனை பேர்களும் சபையில் சேர்த்துக் கொள்ளப்பட்டார்கள்" என்று வேதாகமம் கூறுகிறது. 63. நீங்கள் உங்கள் கரத்தை உயர்த்தி, "தேவனே, என்னை நினைவுகூரும்" என்று கூறுவீர்களா. சீமாட்டியே, தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. ஐயா, தேவன் உம்மை ஆசீர்வதிப்பாராக. ஐயா, தேவன் உம்மை ஆசீர்வதிப்பாராக. அது நல்லது. சீமாட்டியே, தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. அது நல்லது. சீமாட்டியே, தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. அது அருமையானது. சகோதரனே, தேவன் உன்னை ஆசீர்வதிப்பாராக. தேவன் உன்னையும், உன்னையும், உன்னையும் ஆசீர்வதிப்பாராக. அது அருமையானது. 64. மேலே பால்கனிகளில், "தேவன் என்னை நினைவு கூருவாராக. நான்-நான் ஏதோவொரு நாளில் சமாதானத்தோடு உம்மிடம் வர விரும்புகிறேன்" என்று யாரோ ஒருவர் கூறுகிறார். தேவன் உம்மை ஆசீர்வதிப்பாராக, ஐயா. அது அருமையானது. "சகோதரன் பிரான்ஹாம் அவர்களே, நான் ஜெபத்தில் நினைவுகூறப்பட விரும்புகிறேன். நீர் எனக்காக ஜெபிக்க நான்-நான் விரும்புகிறேன். நான் என்னுடைய கரத்தை தேவனை நோக்கி உயர்த்துகிறேன்." சரியாக இப்பொழுதே அதைச் செய்யுங்கள். நீங்கள் அதைச் செய்வீர்களா? வேறு யாராவது ஒருவா? நாங்கள் காத்துக் கொண்டிருக்கையில், சரி, சரி, வேறு யாராவது உங்கள் கரத்தை உயாத்தி, "என்னை நினைவுகூரும்" என்று கூறுவீர்களா? இன்னும் தங்கள் கரத்தை உயர்த்தியிராத யாராவது ஒருவர். சீமாட்டியே, தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. கர்த்தர் தாமே அதை அருளுவாராக. சரி. இப்பொழுது நாம் அவர்களுக்காக ஜெபிப்போம். 65. பரலோகப் பிதாவே, சற்று முன்பு தங்கள் கரத்தை உயர்த்திய ஒவ்வொருவரும்... ஏதோவொன்று அவர்களுடைய இருதயத்தை உணர்த்தியது. இந்த மகத்தான ஷெக்கினா மகிமையில், நாங்கள் இப்பொழுது அதைக் காண்பது போன்று, அவர்கள் அதைக் காண முடியாமல் இருக்கிற போதிலும், அவர்கள் தாங்கள் தெய்வீக பிரசன்னத்தில் இருக்கிறார்கள் என்பதை அறிகிறார்கள். ஆனால் அவர்கள், அதை உணருகிற தங்கள் மனித ஆத்துமாவைக் குறித்து ஏதோவொன்று அங்கேயிருக்கிறது. எங்கோ ஏதோவொன்று இருக்கிறது என்பதை அவர்கள் அறிந்திருக் கிறார்கள். அது எங்கே என்று அவர்களுக்குத் தெரியாது, ஆனால் ஏதோவொன்று அவர்களை வினோதமாக உணர்த்தியது என்பதை அவர்கள் அறிந்து கொண்டார்கள். 66. நாம் தேவனுடைய வார்த்தைக்குச் செவி கொடுப்போம்: 'என் பிதா ஒருவனை இழுத்துக் கொள்ளாவிட்டால், அவனால் என்னிடம் வர முடியாது. எனவே, கர்த்தாவே, வேறு எங்கோ உட்கார்ந்து கொண்டிருப்பதை போல் உணராமல் கர்த்தராகிய இயேசுவின் பிரசன்னத்தில் உட்கார்ந்து கொண்டிருப்பதை போல் இருக்கிறது என்பதை அறிந்து கொள்ள இவர்கள் உணர்வுள்ளவர்களாக இருப்பார்களாக. அவருடைய ஆவி இங்கேயிருக்கிறது. மகத்தான ஷெக்கினா மகிமையானது இப்பொழுது இன்றிரவில் ஆலயத்தில் இருக்கிறது. பிதாவே, நீர் இவர்களை இரட்சிக்க வேண்டுமென்று நான் ஜெபிக்கிறேன். இவர்கள் தாமே சரியாக இப்பொழுதே அதை தங்கள் இருதயங்களில் ஏற்றுக்கொள்வார்களாக. நாங்கள் இதை அவருடைய... இயேசுவின் நாமத்தில் வேண்டிக் கொள்கிறோம். ஆமென். 67. சரி, நாம் பெற்றிருக்கிறோம்... எத்தனை பேர் இருக்கிறார்கள்? பத்து பேரா? சரி, இப்பொழுது, X பத்து முதல் பதினைந்து வரை எழுந்து நில்லுங்கள். பத்து முதல் பதினைந்து வரை சரியாக வரிசையில் வந்து நில்லுங்கள். இப்பொழுது, சகோதரர்களே, அங்கே இன்னும் கொஞ்சம் அதிகமான இடம் நமக்கு இருக்குமா? இன்னும் கொஞ்சம் அதிகமான இடம் இருக்கிறது. யாரிடம் X அல்லது 11 உள்ளது. நாங்கள் உங்கள் கரத்தைக் காணட்டும். உங்களால் கூடுமானால், மேலே வாருங்கள். பதினொன்றா? சரி, பன்னிரண்டு, பதிமூன்று, பதினான்கு, பதினைந்து, பதினாறு பதினேழு பதினெட்டு, பத்தொன்பது, இருபது. 68. எத்தனை பேர் நின்று கொண்டிருக்கிறார்கள் என்பது காரியமில்லை, ஆனால் எல்லாரும் நின்று கொண்டிருக்க நாம் விரும்பவில்லை, எனவே நீங்கள் காத்துக் கொண்டிருக்க வேண்டும். நாம் அதைக் குறித்து ஏதோவொருவித ஒழுங்கைக் கொண்டிருக்க வேண்டியிருக்கிறது, ஏனென்றால் நீங்கள் அவ்வாறு செய்யாவிட்டால், இங்கே மேடையின் மேல் ஒரு சந்தடி உண்டாயிருக்கும், அப்பொழுது உங்களால் எதற்காகவும் எந்த ஒழுங்கையும் கொண்டு வர முடியாது. 69. இப்பொழுது மெதுவாக, அவர்கள் தங்களுடைய இடங்களில் நிற்கவைக்கப்படுகையில், நாம் இப்பொழுது மெதுவாகப் பாடுவோம். விசுவாசிக்க மாத்திரம் செய்திடுவாய் என்ற அந்தப் பாடலை நீங்கள் நேசிக்கிறீர்களா? என்னை மேடைக்கு அழைக்க, அது ஏறக்குறைய இருபது வித்தியாசமான பாஷைகளில் பாடப்படுவதை நான் கேட்டிருக்கிறேன். ஏதோவொரு நாளில், இயேசு தம்முடைய சபையைப் பெற்றுக் கொள்ள ஒரு மாம்ச சரீரத்தில் காணக்கூடும் வகையில் வருவதற்கு முன்பாகவே இயேசு என்னை எடுத்துக் கொள்வாரானால், நான் அடக்கம் பண்ணப்பட வேண்டும். அப்போது பூமியின் புழுதிக்குள் போக, ஒரு விதையாக எனக்கு விதிக்கப்பட்டது நிறைவேறும், அது எனக்கு-எனக்கு நியமிக்கப்பட்டுள்ளது: அவர்கள் என்னை கீழே கல்லறையில் இறக்கும் போது, அவர்கள் அதைப் பாடப் போகிறார்கள். நான் போய்விட்டேன் என்று நீங்கள் என்னைக் குறித்துக் கேள்விப்படும் போது, நீங்கள் அப்படியே ஒரு சில நிமிடங்கள் நின்று, உங்களுக்கு நீங்கள் அதை ஒரு விதத்தில் தாழ்ந்த குரலில் பாடி, "மகிமையிலே, அவர் இன்னும் விசுவாசிக்கிறார்" என்று கூறுங்கள். நான் விசுவாசிக்கிறேன். நான் விசுவாசிக்கிறேன். நான் அதைக் குறித்து உணர்வுள்ளவனாயிருப்பேன் என்று நீங்கள்நினைக்கிறீர்களா? நிச்சயமாக. நிச்சயமாக, நான் உணர்வுள்ளவனாகவே இருப்பேன். 70. சாமுவேல் மரித்து நீண்ட காலம் ஆன பிறகு, அங்கே அவன் நின்று கொண்டிருந்தான்; அவன் அப்பொழுதும் கூட ஒரு தீர்க்கதரிசியாகவே இருந்தான். தன்னுடைய தீர்க்கதரிசி களுக்கான வஸ்திரத்தை அவன் உடுத்திருந்தான். அவனைப் பரதீசிலிருந்து அழைத்த அந்த வயதான சூனியக்காரி, அவனை நோக்கிப் பார்த்து, "தேவர்கள் மேலே ஏறி வந்து கொண்டிருப்பதை நான் காண்கிறேன்" என்றாள். அவன் தீர்க்கதரிசிகளுக்கான தன்னுடைய வஸ்திரத்தை உடுத்திக் கொண்டிருந்தது மட்டுமல்ல, ஆனால் அவன் அப்பொழுதும் ஒரு தீர்க்கதரிசியாகவே இருக்கிறான். அடுத்த நாள் என்ன நடக்கப் போகிறது என்பதை அவன் அவர்களிடம் கூறினான், அது அந்த விதமாகவே நடந்தது. 71. நிச்சயமாக, நாம் மரிப்பதில்லை. மற்றவர்கள் பார்வைக்கு நாம் மரிக்கிறோம், ஆனால் நாம் அப்போதும் தேவனுடைய பிரசன்னத்தில் தான் இருக்கிறோம். ஆமென். இயேசு மரிக்கவில்லை. அவர், "நான் பிழைக்கிறபடியால், நீங்களும் பிழைக்கிறீர்கள்" என்றார். அது என்னுடைய இருதயத்தில் இருந்து, அங்கே நித்தியத்திற்காக நிலை நிறுத்தப்பட்டுள்ளது, மேலும் நான் அதை விசுவாசிக்கிறேன். அவர் இன்றிரவு இங்கேயிருக்கிறார் என்று நான் அறிவேன். அவர் சகலத்தையும் நன்றாகவே செய்கிறார் என்பது எனக்குத் தெரியும். 72. இப்பொழுது, நண்பர்களே, இன்றிரவு பில்லி வந்து, என்னை அழைத்து வந்தபோது, சாலையில் வரும்போது, அவன், சொன்னான், அவன், "அப்பா, நீர் ஜனங்களை கொஞ்சம் மிகவும் தாமதமாகப் பிடித்து வைக்கிறீர்" என்றான். நானும் அதைக் கவனித்தேன், மிகவும் தாமதமாகி விட்டது. நான் வருந்துகிறேன். எல்லாமே அது இருக்க வேண்டிய விதமாகவே இருக்கிறது என்பதை அறிந்திருக்கிறேன், அங்கே கடிகாரத்தைப் பார்க்கும்போது, இப்பொழுது கால் மணிநேரம், ஏறக்குறைய 17 நிமிடங்கள் தாமதமாகி விட்டது. 73. நீங்கள் இன்றிரவில் எனக்கு தயவு செய்ய விரும்புகிறேன். நீங்கள் செய்வீர்களா? இப்பொழுது அப்படியே சுவிசேஷத்தின் நிமித்தமாக: நீங்கள் அப்படியே சற்று நேரம் அமைதியாக உட்காருவீர்களானால்; சுற்று முற்றும் போகாதீர்கள். அப்படியே மிகவும் அமைதியாக உட்கார்ந்திருங்கள். ஒருக்கால் நீங்கள் அதை விசுவாசிக்காவிட்டால், அப்படியே அப்படியே... அதைச் செய்ய வேண்டாம்... அப்படியே அமைதியாக உட்கார்ந்திருந்து, "நல்லது, அது உண்மையாக இருக்குமானால், அதை எனக்கு தெரியப்படுத்தும்படி, நான் - நான் தேவனிடம் ஜெபிப்பேன்" என்று கூறுங்கள். 74. இப்பொழுது, இங்கே வியாதிப்பட்ட அநேக ஜனங்கள் இருக்கிறார்கள்; ஜெப அட்டைகள் இல்லாத அநேகர் இருக்கிறார்கள், ஆனால் இயேசு கிறிஸ்து உங்களைப் பற்றி எல்லாவற்றையும் அறிந்திருக்கிறார். நீங்கள் அதை விசுவாசிக்கிறீர்களா? நிச்சயமாக. அவரால் உங்களை குணமாக்க முடியும். இப்பொழுது விசுவாசியுங்கள். எத்தனை பேரிடம் ஜெப அட்டைகள் இல்லை என்றாலும் சுகமாக விரும்புகிறீர்கள்? நாங்கள் உங்கள் கரத்தைக் காணட்டும். நீங்கள் எங்கேயிருந்தாலும் எனக்குக் கவலையில்லை. பாருங்கள். சரி, அது... 75. இப்பொழுது, அந்த ஸ்திரீ அவரைத் தொட்டது போல நீங்களும் அப்படியே அவரைத் தொடுங்கள். பாருங்கள்? அப்படியே அவரைத் தொட்டு, (அவர் பிரதான ஆசாரியராயிருக்கிறார்), "இப்பொழுதும், கர்த்தாவே, நான் வாழ்ந்து கொண்டிருக்கும் இந்த மூன்று பரிமாணங்கள் மேலே நான் -நான் நம்பிக்கை கொண்டிருக்கவில்லை; நான் விசுவாசத்தினாலே, உம்மிடம் நம்பிக்கை வைக்கப் போகிறேன், நான் வருகிறேன். இப்பொழுது, நீர் என்னிடம் இரக்கமாயிருக்க வேண்டுமென்றும், என்னுடைய சுகத்தை அருள் வேண்டுமென்றும் நான் உம்மிடம் வேண்டிக் கொள்ளப் போகிறேன்" என்று கூறுங்கள். அப்பொழுது அவர் அதைச் செய்வார். வாக்குத்தத்தம் பண்ணின அவர் உண்மையுள்ளவராய் இருக்கிறார். நீங்கள் அதை விசுவாசிக்கிறீர்களா? அவர் நிச்சயமாக உண்மையுள்ளவராய் இருக்கிறார். 76. இப்பொழுது அப்படியே மிகவும் அமைதியாகவும் பயபக்தியாகவும் இருங்கள். மேலும் இப்பொழுது, அவர்கள் இன்னும் அங்கே ஜெப வரிசையில் சிலவற்றை வரிசையில் கொண்டு வந்து கொண்டிருக்கையில், நான் இதை ஜனங்களிடம் சொல்ல விரும்புகிறேன், நான் அவ்வாறு நினைக்கிறேன். நான் இதை ஜனங்களிடம் சொல்ல விரும்புகிறேன்: இயேசு கிறிஸ்து மரணத்திலிருந்து உயிர்த்தெழுந்திருக்கிறார் என்றால், அவர் நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருப்பார். மேலும் இப்பொழுது, நான் ஒரு கிறிஸ்தவனாக, அவர் இங்கே மாம்சத்தில் இருந்த போது, கடந்து சென்ற நாட்களில் அவர் இருந்த அதே விதமாகவே இப்பொழுதும் இருக்கிறார் என்று விசுவாசிக்கிறேன்; ஒரே காரியம் என்னவென்றால் ஆவியின் ரூபத்தில் அவர் இங்கேயிருந்து, உலகமானது எப்பொழுதாவது உண்டாக்கப் படுவதற்கு முன்பாகவே, இந்த தனிப்பட்ட நபர்கள் பூமியின் மேல் இருப்பார்கள் என்று அவர் அறிந்திருந்தார் என்ற தேவனுடைய முன்னறிவின் மூலமாக, தனிப்பட்ட நபர்கள் மூலமாகக் கிரியை செய்து கொண்டிருக்கிறார். நீங்கள் அதை விசுவாசிக்கிறீர்களா? அது வேதாகமமாயிருக்கிறது. 77. நீங்கள் ஏதோ ஒன்றாக இருக்க விரும்பியதால் நீங்கள் ஏதோ ஒன்றாக இல்லை. நீங்கள் இப்போது யாராக இருக்கிறீர்களோ தேவனுடைய சித்தத்தின்படி தான் அப்படி இருக்கிறீர்கள் புரிகிறதா? "தேவன் சபையில் நியமித்திருக்கிறார்." பாருங்கள்? பாருங்கள்? மாம்சத்தில் அதைப் பெற்றுக் கொண்டு விடாதீர்கள், அது ஒரு போதும் கிரியை செய்யாது. தேவன் உங்களை வைத்திருக்கிற இடத்தில் உறுதியாக நில்லுங்கள். புரிகிறதா? அது... மூலமாகத் தான். வரங்களும் அழைப்புகளும் மனந்திரும்புதல் இல்லாமலே இருக்கின்றன." அவைகள் தேவனுடைய முன்னறிவாக இருக்கிறது. தேவன்... நீங்கள் விரும்புவீர்கள் அல்லது விரும்பமாட்டீர்கள் என்ற ஒரு நிலையான நியதியை அவர் அமைப்பது கிடையாது, அவர் அவ்வாறு செய்வதில்லை; ஆனால் அவருடைய முன்னறிவானது, அந்த முன்னறிவின் மூலமாக, அவரை முன்குறிக்க செய்தது. முன்குறித்தலானது முன்னறிவை பின்னால் திரும்பி நோக்கி, முன்னறிவானது நடக்க இருப்பதை நோக்கினது. 78. ஆனால் அவர் இங்கேயிருக்கிறார், அவர் இன்றிரவு இங்கேயிருக்கிறார். அவர், தாம் இங்கே பூமியின் மேல் செய்தது போன்று, இன்றிரவும் அற்புதங்களிலும், இயற்கைக்கு மேம்பட்டவைகளிலும், தம்மை உங்களிடம் ஜீவனுள்ளவராக நிரூபிப்பாரானால், இங்கே உள்ளேயிருக்கும் ஒவ்வொரு நபரும் அவரை உங்கள் முழு இருதயத்தோடும் விசுவாசிப்பீர்களா? நீங்கள் அதைச் செய்வீர்களா? அப்படியானால் ஜெபியுங்கள் எனக்காக ஜெபம் செய்யுங்கள். இப்பொழுது, நீங்கள் ஒரு.. என்னவென்று உணர்ந்து கொள்கிறீர்கள். நான் இங்கே நின்று கொண்டிருக்கிறேன். மேலே வந்து வியாதியஸ்தருக்காக ஜெபிக்கும் படி, யாரோ ஒருவர் என்னுடைய இடத்தை எடுத்துக் கொள்ள விரும்புவீர்களா?.நான் மகிழ்ச்சியாயிருப்பேன். பாருங்கள்? 79. இப்பொழுது, இது ஒரு சவாலாக உள்ளது. இது உங்களுக்கு ஒரு சவாலாக இருக்கிறது. பரிசுத்த ஆவியானவர் அதைச் செய்வார் என்று நான் கூறவில்லை. எனக்குத் தெரியாது. அது அவரைப் பொறுத்தது. நான் வெறுமனே அவருடைய ஊழியக்காரன். 80. இப்பொழுது, ஜெப வரிசை ஆயத்தமாகி விட்டதா? சரி, யார்? இது தான் முதலாவதா, அல்லது இவர்கள் தான் முதலாவது சீமாட்டியா? சரி, நீங்கள் காண்கிறீர்களா? சரி. ஐயா. இங்கே வாருங்கள், சீமாட்டியே. இப்பொழுது, நீங்கள் அப்படியே உங்கள் சிதறாத கவனத்தை கர்த்தராகிய இயேசுவுக்கு செலுத்துவீர்களானால். இப்பொழுது, எல்லா சந்தேகத்தையும் உங்கள் இருதயத்தை விட்டு அப்படியே எடுத்து விடுங்கள். 81. இஸ்ரவேல் புத்திரர்களுக்கு முன்பாக நடப்பிக்க, தீர்க்தரிசியாகிய மோசேக்கு இரண்டு அடையாளங்கள் கொடுக்கப்பட்டன. அவன் ஒரு முறை அதை அவர்களுக்கு நடப்பித்து, எல்லா இஸ்ரவேலர்களும் வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசத்தை நோக்கி அவனைப் பின் தொடர்ந்து போனார்கள். 82. இயேசு உயிரோடிருக்கிறார் என்று அவர் இன்றிரவு நிரூபிக்க முடியுமானால், ஒரே வழி... ஒரு மனிதன் தன்னுடைய கரங்களில் வடுக்களோடும் கூட இங்கே வர முடிந்தால், அது ஒரு மாய்மாலக்காரராக இருக்க முடியும். புரிகிறதா? வஞ்சிக்கிற எதுவுவாகவும் அது இருக்க முடியும். பிசாசு அவ்விதமாக தோன்ற முடியும். ஆனால் இயேசு தோன்றுவாரானால், அவர் தோன்றுவார் என்று கூறியிருக்கிற அதே விதமாகவே தோன்றுவார், அதற்கு முரணான எதுவாகவும் அல்ல. எனவே, இயேசு இன்றிரவு இங்கே தோன்றி, தாம் செய்வார் என்று அவர் சொல்லியிருக்கிற காரியங்களைச் செய்வாரானால், நீங்கள் அவரை உங்கள் முழு இருதயத்தோடும் விசுவாசியுங்கள். இப்பொழுது, நான் நினைக்கிறேன், இங்கே எனக்கு முன்பாக இருக்கும் இந்தச் சீமாட்டி, நாங்கள் ஒருவருக்கொருவர் அந்நியர்களாயிருக்கிறோம் என்று நினைக்கிறேன், அப்படித்தானே, சீமாட்டியே? சரி. 83. இப்பொழுது, இந்தச் சீமாட்டி இங்கே நின்று கொண்டிருக்கிறார்கள், இவர்கள் முதலாவது நபராக இருக்கிறார்கள். நான் முதலாவது இவர்களைக் கொண்டு வந்து இங்கே இவர்களைக் கொண்டிருப்பதற்கான காரணம் என்னவென்றால், என்னை நானே காட்சியிலிருந்து வெளியே அகற்றி விடுவதற்கு தான், அந்த அபிஷேகம். ஏதோவொன்று இங்கேயிருக்கிறது என்பதை நீங்கள் அறிகிறீர்கள். இப்பொழுது, நாம் விரைவாகச் செய்யப் போவதில்லை. உங்கள் நேரத்தை எடுத்துக் கொள்ளுங்கள். மேலும் நாம்... நீங்கள் பயபக்தியாக இருங்கள். 84. மேலும் இப்பொழுது, ஏதோவொன்று இங்கேயிருக்கிறது என்பதை நாம் அறிகிறோம். இப்பொழுது, வேதாகமம் என்ன கூறுகிறது என்பதைக் காண்போம். வேதாகமம், "இரண்டு அல்லது மூன்று பேர் என் நாமத்தினாலே கூடியிருப் பார்களானால், நான் அவர்கள் மத்தியிலே இருப்பேன். நான் எப்போதுமே எக்காலத்திலும் அவர்கள் மத்தியிலே இருப்பேன், உலகத்தின் முடிவுபரியந்தம் நான் அவர்களோடு கூட இருப்பேன். நான் செய்கிறவைகளை நீங்களும் செய்வீர்கள்" என்று கூறுகிறது. 85. இப்பொழுது, இங்கே ஒரு பெண்மணி இருக்கிறார்கள், இது நம்முடைய ஆண்டவரோடு கிணற்றண்டையில் ஒரு ஸ்திரீ நின்று கொண்டிருந்தது போன்றிருக்கிறது; நான் ஒரு மனிதன், இவர்கள் ஒரு பெண்மணியாக இருக்கிறார்கள். அவர் ஒரு மனிதராக இருந்தார்; அந்த ஸ்திரீ கிணற்றண்டையில் இருந்தாள், அவள் ஒரு சமாரிய பெண். இப்பொழுது, இந்தப் பெண்மணியை எனக்குத் தெரியாது, அவருக்கும் அந்த ஸ்திரீயைத் தெரியாதிருந்தது; ஆனால் அவர் அவளிடம் பேசும்படியாகப் போனார். அவர்-அவர் அவளிடம் பேசுகையில், நல்லது, அவளுடைய பிரச்சனை எங்கேயிருந்தது என்பதை அவர் கண்டு பிடித்தார். அவளுடைய பிரச்சனை எங்கேயிருந்தது என்பதை அவர் அவளிடம் கூறின போது, அவள் பட்டணத்திற்குள் ஓடிச் சென்று, அவள், "வந்து, ஒரு மனிதரைப் பாருங்கள்" என்று சொல்லத் தொடங்கும் அளவுக்கு, அது அவளை அவ்வண்ணமாக உணர்ச்சி ஆர்வம் கொண்டு எழுப்பியது. அது உண்மை. வேதாகமத்தை வாசிக்கிற கிறிஸ்தவர்களே, அது உண்மை அல்லவா? பரிசுத்த யோவான் 4. 86. நாத்தான்வேல் அவரிடம் வந்து, நின்ற போது, அவர் நாத்தான்வேலைப் பார்த்து, அவன் எங்கேயிருந்தான் என்றும், அவன் வருவதற்கு முன்பாக செய்த ஏதோவொன்றையும் கூறி, அவன் ஒரு விசுவாசி என்றும் அவனிடம் கூறினார். நாத்தான்வேல், "நீர் தேவனுடைய குமாரன்" என்று கூறினான். அநேக, அநேக, அநேக, அநேக, அநேகரிடம், ஆமாம், அப்படியே தொடர்ந்து கீழாக, கீழாக அது சம்பவித்தது. 87. இப்பொழுது, அது கிறிஸ்துவாக இருக்குமானால், என்னால் அவருடைய ஆவிக்கு என்னைத் தானே விட்டுக் கொடுக்க முடியுமானால், அவரால் அதே காரியத்தைச் செய்ய முடியும். நீங்கள் தாமே அவருடைய ஆவிக்கு உங்களை விட்டுக் கொடுத்து, போய் கூச்சலிடலாம். வேறு யாரோ ஒருவர் தங்கள் ஆவியை விட்டுக் கொடுக்கும் போது, போய் பிரசங்கம் பண்ணலாம். ஆனால் நான் என்னுடைய ஆவியை விட்டுக் கொடுத்தால், தரிசனங்கள் வெளிப்படுகின்றன, ஏனென்றால் நான் அதற்காகவே பிறந்திருக்கிறேன். பாருங்கள்? 88. இப்பொழுது, என்னால் ஸ்தோத்தரிக்கப்பட்ட பரிசுத்த ஆவிக்கு விட்டுக் கொடுக்க முடியுமானால், நம்முடைய சகோதரி யாரென்றும், இவர்களுடைய கோளாறு என்னவென்றும், அல்லது இவர்கள் எதற்காக இங்கேயிருக்கிறார்கள் என்றும், அல்லது அதைக் குறித்த ஏதோவொன்றை அவரால் என்னிடம் கூற முடியும், எனக்கு... தெரியாது என்று உங்களுக்குத் தெரியும். உங்களை எனக்கு எப்படி தெரிந்திருக்கும்? நாம் அநேகமாக அதிக மைல்கள் தூரம் வித்தியாசத்தில், அநேக வருடங்கள் வித்தியாசத்தில் பிறந்திருக்கிறோம், நாம் ஜீவியத்தில் சந்திப்பது இதுவே முதல் முறையாக இருக்கலாம். அது உண்மை என்றால், உங்கள் கரத்தை மேலே உயர்த்துங்கள். 89. இப்பொழுது, ஜனங்கள் காண்கிறார்களா? இந்தப் பெண்மணியைக் குறித்து எனக்கு எதுவுமே தெரியாது. தேவன் அதை அறிவார். ஆனால் அவர் பரிசுத்த ஆவியால், அவரால் கூடுமானால், நான் எனக்கு தெரிவிப்பாரானால்... நல்லது, அந்தப் பெண்மணி ங்கே ஏதோ ஒரு நோக்கத்திற்காக வந்திருக்கிறார், அவள் ஒரு வேளை வியாதியாய் இருக்கலாம், ஒரு வேளை வியாதி இல்லாமலும் இருக்கலாம்; ஒரு வேளை அவர்களுக்கு பிரச்சனைகள் இருக்கலாம்; ஒரு வேளை வேறு யாரோ ஒருவருக்காக இங்கு நின்று கொண்டிருக்கலாம். எனக்குத் தெரியாது. பாருங்கள்? அவருக்குத் தெரியும். ஆனால் இவர்களைக் குறித்து ஏதோவொன்றை அவர் என்னிடம் சொல்லுவாரானால், நீங்கள் ஏற்றுக் கொண்டு, அப்படியானால், அது... அல்லது நீங்கள் எதற்காக இங்கே இருக்கிறீர்கள் என்று அவர் என்னிடம் சொல்லுவாரானால், அவர் அதை உங்களுக்குக் கொடுக்கும்படி இங்கேயிருக்கிறார் என்பதை எண்ணி, அதை விசுவாசித்து, அறிந்து கொள்ளுகையில்,நீங்கள் ஏற்றுக் கொள்வீர்கள். அது சரிதானா? கவனித்துக் கொண்டிருக்கிற மற்றவர்களாகிய உங்களுக்கும் அவர் அதே காரியத்தைச் செய்வார் என்று விசுவாசிப்பீர்களா? மற்ற செய்திகளிலிருந்து 126 வயோதிக குருடனான பர்திமேயு ஒரு சமயம் தன்னுடைய அந்தகார நேரத்தை அடைந்திருந்தான். 127 இயேசுவானவர் எரிகோவில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த் ஒரு முழு சுவிசேஷ வர்த்தக புருஷருடைய காலை சிற்றுண்டி கூட்டத்தில் அங்கே இருந்தார். அங்கே அவர் சகேயுவை சந்தித்திருந்தார். அவர் வீதியில் இருந்த ஒரு மரத்தில் அவனை சந்தித்திருந்தார். எனவே அவர்...அவர் எந்தக் காரியத்தையும் ஏற்பாடு செய்யவில்லை என்று நான் நிச்சயம் நம்புகிறேன். புரிகிறதா? ஆதலால் அப்பொழுது அவர் அங்கு வந்தபோது, அவர்-அவர் அவனை சந்தித்தபோது, சகேயு அவருடன் சென்றான். 128 வயோதிக குருடனான பர்திமேயு ஒரு சிறு பையனாய் இருந்த முதற்கொண்டு குருடனாக இருந்து வந்தான். ஆதலால் இயேசு அந்த வாசலின் வழியாய் வெளியே வருவார் என்று அவன் எண்ணினான். எனவே அவன் காத்துக் கொண்டிருந்தான். சிறிது நேரம் கழித்து அவன் பெரும் இரைச்சலை கேட்டான், எல்லோரும் அருகில் வந்து கொண்டிருந்தனர். 64-0213 - அதன் பின்னர் இயேசு வந்து அழைத்தார் 210. அந்தக் குருடனான பர்திமேயு வீதியிலே அமர்ந்து பிச்சையெடுத்துக் கொண்டிருந்தான். இயேசுவானவர் ஒருகால் பர்திமேயு உட்கார்ந்திருந்த இடத்திலிருந்து, அதாவது இங்கிருந்து ஏறக்குறைய அடுத்த மூலைவரையில் உள்ள தூரத்தில் இருந்ததான வாசலைண்டைக்கு நடந்து சென்றிருந்திருக்கலாம். இதோ இயேசு வந்துவிட்டார். அப்பொழுது அங்கே அந்த மதிற்சுவற்றிற்கு எதிராக உட்கார்ந்துகொண்டிருந்த அந்தக் குருட்டுப் பிச்சைக்காரன் கூச்சலிட்டான். 55-04-10M அவருடைய உயிர்த்தெழுதலின் நிரூபணம் 319. இப்பொழுது, விசுவாசம் கொள்ளுங்கள். சந்தேகப்படாதீர். என்னால் சுகமாக்க முடியாது. அவர் இங்கே இருக்கிறார். அவர்தான் சுகமாக்குபவர். சந்தேகப்படவேண்டாம். குருடனான பர்திமேயு போல இருங்கள்: உங்கள் தருணத்திற்காக காத்துக் கொண்டிருங்கள். 60-04-03 கழுகு தன் கூட்டைக் கலைக்கிறது போல (தேவனின் கழுகுகள்) 2